தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வில்லியனுாரில் நாளை கிராம சபை கூட்டம்

வில்லியனுாரில் நாளை கிராம சபை கூட்டம்

வில்லியனுாரில் நாளை கிராம சபை கூட்டம்


ADDED : ஜன 25, 2024 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2024 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார் : குடியரசு தினத்தை முன்னிட்டு வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் 24 பஞ்சாயத்துகளிலும் நாளை கிராம சபை கூட்டம் நடக்கிறது.

ஆணையர் எழில்ராஜன் செய்தி குறிப்பு:

குடியரசு தினத்தை முன்னிட்டு, வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட சேதராப்பட்டு, தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம், பொறையூர்-அகரம், குருமாம்பேட், வில்லியனுார், சுல்தான்பேட்டை, வி.மணவெளி, ஒதியம்பட்டு, கணுவாப்பேட்டை, கோட்டைமேடு, உறுவையாறு, திருக்காஞ்சி, மங்கலம், கீழ்சாத்தமங்கலம், சிவராந்தகம் மற்றும் அரியூர் உள்ளிட்ட 24 கிராம பஞ்சாயத்துகளில் நாளை (26ம் தேதி) காலை 10:00 மணி முதல் கிராம சபை கூட்டம் அந்தந்த பகுதி கிராம பஞ்சாயத்து அலுவலங்களில் நடக்கிறது.

கிராம சபை கூட்டங்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்று கிராம வளர்ச்சி திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயார் செய்ய தங்களது ஆலோசனைகளை வழங்கலாம்.

இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us