தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்ணாடிப்பட்டு கொம்யூனில் நாளை கிராம சபை கூட்டம் 

 மண்ணாடிப்பட்டு கொம்யூனில் நாளை கிராம சபை கூட்டம் 

 மண்ணாடிப்பட்டு கொம்யூனில் நாளை கிராம சபை கூட்டம் 


ADDED : மே 29, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம் யூன் பஞ்சாயத்து சார்பில் கிராம சபை கூட்டம் நாளை (30ம் தேதி) நடக்கிறது.

ஆணையர் எழில்ராஜன் செய்திக்குறிப்பு:

உள்ளாட்சித்துறை அறிவுறுத்தலின்படி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயதுக்குட்பட்ட 18 கிராம பஞ்சாயத்துகளில் கடந்த 1ம் தேதி மே தினத்தையொட்டி, நடக்க இருந்த கிராம சபைக் கூட்டம், சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது, தேர்தல் விதிமுறைகள் முடிந்து புதிய அரசு பதவியேற்றுள்ளதால், மே தினத்திற்கான கிராம சபைக் கூட்டம் நாளை (30ம் தேதி) காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை நடக்கிறது.

அதன்படி, திருவாண்டார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, திருபுவனை கொம்யூன் அலுவலகம், சன்னியாசிக்குப்பம், கலிதீர்த்தாள்குப்பம் (மேற்கு), மதகடிப்பட்டு, பி.எஸ். பாளையம், செல்லிப்பட்டு , சோரப்பட்டு கிராம பஞ்சாயத்து அலுவலகம், மதகடிப்பட்டு பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, கலிதீர்த்தாள்குப்பம் (கிழக்கு) திரவுபதியம்மன் கோவில் திடல், மண்ணாடிப்பட்டு ஜவஹர் பவன், மணலிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி, கூனிச்சம்பட்டு நாடக மேடை, திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளி, கைக்கிலப்பட்டு அரசு தொடக்கப் பள்ளி, சுத்துக் கேணி மற்றும் சந்தை புதுக் குப்பம் சமுதாய நலக்கூடம் , காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்கிறது.

இதில், பொதுமக்கள் பங்கேற்று கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளை, முன்வைத்து தீர்மானமாக நிறைவேற்றலாம். அப்பணிகளை செய்ய தேவையான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு, நிதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us