/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மயான கொள்ளை உற்சவம்; கொடுக்கூரில் நாளை துவக்கம்
/
மயான கொள்ளை உற்சவம்; கொடுக்கூரில் நாளை துவக்கம்
ADDED : மார் 06, 2024 03:21 AM
திருக்கனுார் : கொடுக்கூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை உற்சவம் வரும் 10ம் தேதி நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான கொடுக்கூர் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், மயானக்கொள்ளை உற்சவம் நாளை (7ம் தேதி) மாலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
வரும் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு பால்குடம் ஊர்வலம், அபிஷேக ஆராதனை நடக்கிறது.
இரவு 8:00 மணிக்கு பூவாளக்கப்பரை, இருளன்முகம், அக்னி கரகத்துடன் சுவாமி வீதியுலா நடக்கிறது.
வரும், 9ம் தேதி காலை 8:00 மணிக்கு கொரைக்கூடை வீதியுலா, இரவு 9:00 மணிக்கு குறத்தி வேடத்தில் அம்மன் ஊர்வலம், வல்லாளக்கண்டன் கோட்டையை அழித்தல், ரணகளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, வரும் 10ம் தேதி மதியம் 12:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மயானத்திற்கு சென்று, மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது.

