நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை விழா நேற்று மாலை 5.00 மணிக்கு நடந்தது. இதையொட்டி காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகளும், மாலை 5:00மணிக்கு மயானக்கொள்ளை விழா நடந்தது.
இதில் பொதுமக்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த காய் மற்றும் கனிகளை மயானத்தில் கொள்ளையாக விட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு கும்ப படையல் நிகழ்ச்சி நடந்தது.

