/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிள்ளையார்குப்பத்தில் இன்று மயானக்கொள்ளை
/
பிள்ளையார்குப்பத்தில் இன்று மயானக்கொள்ளை
ADDED : மார் 08, 2024 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பிள்ளையார்குப்பம் துலுக்காண அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று மயானக்கொள்ளை நடக்கிறது.
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் துலுக்காண அங்காளபரமேஸ்வரி கோவில் மயானக்கொள்ளை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
முக்கிய விழாவான மயானக் கொள்ளை இன்று (8ம் தேதி) மாலை 5 மணியளவில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.

