/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யோகா பயிற்சி மூலம் மிகப்பெரும் மன சக்தியை அடைய முடியும்: கவர்னர் தமிழிசை பேச்சு
/
யோகா பயிற்சி மூலம் மிகப்பெரும் மன சக்தியை அடைய முடியும்: கவர்னர் தமிழிசை பேச்சு
யோகா பயிற்சி மூலம் மிகப்பெரும் மன சக்தியை அடைய முடியும்: கவர்னர் தமிழிசை பேச்சு
யோகா பயிற்சி மூலம் மிகப்பெரும் மன சக்தியை அடைய முடியும்: கவர்னர் தமிழிசை பேச்சு
ADDED : பிப் 12, 2024 06:52 AM

வானூர் : 'யோகா பயிற்சி செய்து வருவதன் மூலம் மிகப்பெரும் மன சக்தியை அடைய முடியும்' என,
ஆரோவில்லில் நடந்த சர்வதேச ஆன்மிக மாநாட்டில், புதுச்சேரி கவர்னர் தமிழிசை பேசினார்.
அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, இரண்டாவது சர்வதேச ஆன்மிக மாநாடு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் நகரில் உள்ள யூனிட்டி மையத்தில் நடந்தது.
விழாவிற்கு ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி வரவேற்றார்.
விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை பேசியதாவது:
பல நேரங்களில் அமைதி ஒரு சக்தியை தருகிறது. அன்னை மற்றும் அரவிந்தர், அதனை கண்டறிந்து ஒரு பகுதியை உருவாக்கி அதன் மூலம் அமைதி், வலிமையை நாம் பெற்று வருகிறோம். எத்தனை சவால்களில், எத்தகைய சூழ்நிலையில், நாம் இருந்தாலும் அதைஅனைத்தையும் மூளையே சமாளிக்கிறது.
கடலில் அலையானது எப்போதும் அடித்துக் கொண்டே இருக்கும். அதனை நிறுத்த முடியாது.
அதே போல வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும். ஆனால் நம் மனது பாறையைப் போல உறுதியாக இருக்க வேண்டும்.
நாம் இதனை இளையோருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தற்கால சூழலில் தற்கொலைகள் அதிகம் நிலவுகிறது. அவர்களால் சிக்கல்களை எதிர்கொள்ள முடியவில்லை. மகாபாரதத்தில் தருமர் மற்றும் பீஷ்மர் உரையாடுவதாக ஒரு கதை சொல்லப்படுகிறது.
அந்த கதையில் வேகமாக அடித்துச் செல்லும் நீரின் அருகில் உறுதியாக இருக்கும் மரமானது முறிந்து விழும்.
ஆனால் வளைந்து கொடுக்கும் புல்லானது இறுதிவரை இருக்கும். அதுபோல சூழ்நிலை பொருத்து நாம் சரியாக நடந்து கொள்ள வேண்டும்.
முன்னோர்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
யோகா ஒரு மிகச் சிறந்த கலை. அது உடல் மற்றும் மன உறுதி, அமைதியும் தருகிறது. உலகில் மற்ற கலைகளின் மூலம் பெற முடியாத பலனை யோகா தருகிறது.
காலை தியானத்தோடு யோகா பயிற்சி செய்து வருவதன் மூலம் மிகப்பெரும் மன சக்தியை அடைய முடியும். அதன் மூலம் எத்தகைய சிக்கல்களையும் உங்களால் சமாளிக்க முடியும்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.