புதுச்சேரி, காரைக்காலில் 28ம் தேதி இ.எஸ்.ஐ., குறை தீர்வு முகாம்
புதுச்சேரி, காரைக்காலில் 28ம் தேதி இ.எஸ்.ஐ., குறை தீர்வு முகாம்
ADDED : செப் 25, 2026 08:00 PM
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இ.எஸ்.ஐ., விழிப்புணர்வு மற்றும் குறை தீர்வு முகாம் வரும் 28ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பிட்டுக்கழக மண்டல இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு:
தொழிலாளர் அரசு காப்பிட்டுக்கழகம் (இ.எஸ்.ஐ) மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இ.பி.எப்) ஒருங்கிணைந்து விழிப்புணர்வு மற்றும் குறை தீர்ப்பு முகாமை வரும் 28ம் தேதி, ஒதியம்பட்டு நித்யா பேக்கேஜிங் கம்பெனியில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடத்துகின்றன.
அதே போல, காரைக்கால் சேத்திலால் நகரில் உள்ள வித்யோதயா தனியார் பள்ளியில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடக்கிறது. முகாமில், தொழிலாளர்கள், பயனாளிகள், தொழில் முனைவோர்கள், இ.எஸ்.ஐ., மற்றும் இ.பி.எப். தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கலாம். உடனடியாக கோரிக்கை மனு மீது தீர்வு காணப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
