இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் 13ம் தேதி குறைதீர்வு முகாம்
இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் 13ம் தேதி குறைதீர்வு முகாம்
UPDATED : மே 08, 2026 10:31 PM
ADDED : மே 08, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்ரேி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மண்டல அலுவலகத்தில் வரும் 13ம் தேதி குறைதீர்வு முகாம் நடக்கிறது.
புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மண்டல அலுவலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மண்டல அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமையில் குறைதீர்வு கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி, வரும் 13ம் தேதி மதியம் 3:30 மணிக்கு குறைதீர்வு கூட்டம் நடக்கிறது.
அதில், தொழிலாளர்கள், பயனாளிகள், தொழில் முனைவோர் இ.எஸ்.ஐ., சம்பந்தமுள்ள கோரிக்கைகள் ஏதோனும் இருந்தால், தக்க ஆவணங்களுடன் கடிதம் மூலம் தெரிவிக்கலாம். கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
