/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.எஸ்.ஐ.சி., அலுவலகத்தில் நாளை குறை தீர்வு முகாம்
/
இ.எஸ்.ஐ.சி., அலுவலகத்தில் நாளை குறை தீர்வு முகாம்
ADDED : அக் 07, 2025 01:19 AM
புதுச்சேரி,; புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மண்டல அலுவலகத்தில் நாளை குறை தீர்வு முகாம் நடக்கிறது.
இது குறித்து மண்டல இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரி, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மண்டல அலுவலகம் மூலம் ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை மதியம் 3:30 மணி முதல் 4:30 மணி வரை குறை தீர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை (8ம் தேதி) குறை தீர்வு முகாம் நடக்கிறது.
எனவே, தொழிலாளர்கள், பயனாளிகள் மற்றும் தொழில் முனைவோர்கள், தங்களுக்கு இ.எஸ்.ஐ.சி., சம்பந்தமான கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை விரிவாக ஓர் கடிதத்தில் குறிப்பிட்டு தக்க ஆவணங்களுடன், புதுச்சேரி, முதலியார்பேட்டை, புவன்வரே வீதி, இ.எஸ்.ஐ.சி வளாகம், மண்டல அலுவலகத்தில், குறை தீர்வு முகாமில் பங்கேற்று சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், அக்கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.