தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூளையில் ரத்தக்கசிவு: ஜி.எஸ்.டி அதிகாரி சாவு 

மூளையில் ரத்தக்கசிவு: ஜி.எஸ்.டி அதிகாரி சாவு 

மூளையில் ரத்தக்கசிவு: ஜி.எஸ்.டி அதிகாரி சாவு 


UPDATED : ஜூன் 29, 2026 07:50 PM

ADDED : ஜூன் 29, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 07:50 PM ADDED : ஜூன் 29, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அளவுக்கு அதிகமாக வலி நிவாரன மாத்திரைகள் உட்கொண்ட ஜி.எஸ்.டி அதிகாரி இறந்தார்.

கொல்கத்தாவை சேர்ந்தவர் ரித்தேஷ் ராஜ் ஷாபி, 40; புதுச்சேரியில் உள்ள மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணைய அலுவலகத்தில் உதவி கணக்கு அதிகாரியாக பணியாற்றினார். இவர், முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர், ஜி.எஸ்.டி., குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரித்தேஷ் ராஜ் ஷாபி மூக்கில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் அருகே லேப்டாப், மொபைல் போன், சில மாத்திரைகள் சிதறிக் கிடந்தன. இதையடுத்து போலீசார், ரித்தேஷ் ராஜ் ஷாபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் சந்தேக மரணத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் உடற்கூறாய்வு முடிவில், ரித்தேஷ் ராஜ் ஷாபி, அளவுக்கு அதிகமாக வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து வந்ததும், அதனால் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்தார் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உடல் கொல்கத்தாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us