/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளிகளில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
/
அரசு பள்ளிகளில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : ஜன 22, 2024 06:07 AM
புதுச்சேரி, : அரசுப் பள்ளிகளில் நடந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் தொழிலாளர் வாய்ப்பு துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை துவக்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜீவானந்தம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அன்னை சிவகாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியக்காலாப்பட்டு பாரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி, கரிக்கலாம்பாக்கம் அரசு பெண்கள் பள்ளி, கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலை, விவேகானந்தா ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் 1,362 பேர் கலந்து கொண்டனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வு, உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
சுய தொழில் வேலைவாய்ப்பு குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி தலைமையிலான அதிகாரிகள் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
ஏற்பாடுகளை தேசிய வாழ்வாதார சேவை மையம் செய்திருந்தது.