/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூலநாதர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
/
மூலநாதர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
ADDED : மே 11, 2025 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று குரு பெயர்ச்சி விழா நடந்தது. இதனையொட்டி,குரு பகவானுக்குசிறப்பு அபிஷேக ஆராதனை, பஞ்ச மூர்த்திகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.
மதியம் 1:19 மணிக்கு குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நேரத்தில், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.