தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குரு சித்தானந்தா கோவிலில் நாளை மறுநாள் குரு பெயர்ச்சி

குரு சித்தானந்தா கோவிலில் நாளை மறுநாள் குரு பெயர்ச்சி

குரு சித்தானந்தா கோவிலில் நாளை மறுநாள் குரு பெயர்ச்சி


ADDED : மே 09, 2025 12:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 12:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை மறுநாள் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடக்கிறது.

நவக் கிரகங்களில் ஒன்றான குரு பகவான் நாளை மறுநாள் (11ம் தேதி) பகல் 1:19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார். இக்குரு பெயர்ச்சியை முன்னிட்டு புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்த சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது.அன்று காலை 8:00 மணிக்கு கலச பிரதிஷ்டை, 10:00 மணிக்கு கணபதி ேஹாமம், குரு பகவான் காயத்ரி மந்திர ேஹாமம் மற்றும் நவக்கிரக ேஹாமம், 11:30 மணிக்கு குரு பகவானுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது.

தொடர்ந்து குரு பெயர்ச்சி நடைபெறும் பகல் 1:19 மணிக்கு, குரு பகவானுக்கு மகா தீபாராதனை நடக்கிறது. பூஜைகளை தேவஸ்தான குருக்கள் தேவசேனாதிபதி செய்கிறார்.

குரு பெயர்ச்சி சிறப்பு பூஜையில் பங்கேற்று கலசம் பெற விரும்புவோர் கோவில் அலுவலகத்தில் வரும் 11ம் தேதிக்கு முன்பாக ரூ.300 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும், அபிேஷகத்திற்கு தேவையான பால், தயிர், நெய், பழவகைகள், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களை வரும் 11ம் தேதி காலை 11:00 மணிக்கு முன்பாக அளிக்கலாம். குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், துணைத் தலைவர் சசிக்குமார், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us