UPDATED : ஜூன் 13, 2026 08:15 PM
ADDED : ஜூன் 13, 2026 07:54 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி போகர் சித்தருக்கு 10ம் ஆண்டு குரு பூஜை நடந்தது.
புதுச்சேரி, புதிய பஸ் நிலையம் ஐயனாரப்பன் கோவில் வளாகத்தில் மகா குரு போகர் சித்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 10வது போகர் குரு பூஜை ஜூன் 12 நடந்தது. அதனையொட்டி, போகர் சித்தருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அஷ்டோத்திர வழிபாடு நடந்தது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
