ADDED : செப் 26, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சேதாரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் வீரப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சேதாரப்பட்டு-புதுச்சேரி சாலை, பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அங்கு சேதாரப்பட்டு காமராஜர் நகரைச் சேர்ந்த ஆதிமூலம் 65, குட்கா பொருட்களை பெட்டிக்கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.