ADDED : அக் 28, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
உருளையான்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் மாலை பஸ் நிலையத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறா என ஆய்வு செய்தனர். அப்போது ரெட்டியார்பாளையம் ஜவகர் நகரைச் சேர்ந்த சிவகுமார் 49, என்பவரது பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து சிவகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

