நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி ; பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை கடைகளில் சோதனை நடத்தினர்.
மூலகுளம் ஜே.ஜே.நகர் 4 வது தெருவைச் சேர்ந்த சண்முப்பிரியன், 33, என்பவரது பெட்டிக் கடையில் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, சண்முகப்பிரியனை கைது செய்து, அவரது கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.