ADDED : டிச 26, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது மடுகரை வாணியர் வீதியைச் சேர்ந்த புருேஷாத்தம்மன், 42, என்பவரது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், புருேஷாத்தமன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

