ADDED : ஏப் 05, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் பெட்டி கடையில், குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் சந்திப்பில், பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்கா விற்பனை செய்வதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த கடையில் சோதனை செய்தனர்.
கடையில் குட்கா வைத்து விற்றதை போலீசார் கண்டறிந்தனர். அதையடுத்து, கடை உரிமையாளர் அம்பலவாணன், 36, என்பவரை போலீசார் கைது செய்தனர்.