ADDED : அக் 05, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு உதவி சப் இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அரசு கல்லுாரி அருகில் உள்ள கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, அங்குள்ள கடைகளில் சோதனை செய்தனர். புதுச்சேரி - மயிலம் மெயின் ரோட்டில், விழுப்பரம் மாவட்டம், பேராவூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர் 56, என்பவரது கடையில் குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் இருந்த ஹான்ஸ், கூல்லிப்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கடை உரிமையாளர் சங்கர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.