ADDED : ஜூன் 19, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர் .
காலப்பட்டு உதவி சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.
இ.சி.ஆர்., பெரியகாலப்பட்டு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்த சென்று அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அதில் பெரியகாலப்பட்டு பகுதியைச் சேர்ந்த கருணாகரன், 55, என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லீப், விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்கள் வைத்து விற்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
