ADDED : ஆக 14, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: மடுகரையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். மடுகரை ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனை செய்தனர். அதில் மடுகரை முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த அன்வர், 29, என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லீப், விமல்பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்களை வைத்து விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அன்வரை கைது செய்தனர்.
