/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி அருகில் குட்கா விற்றவர் கைது
/
பள்ளி அருகில் குட்கா விற்றவர் கைது
ADDED : அக் 11, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பள்ளி அருகில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஒதியன்சாலை சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று மதியம் 2 மணியளவில், போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது திருவள்ளுவர் அரசு பள்ளி அருகில், பெட்டிக்கடை வைத்துள்ள சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குமார் 60, என்பவரது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது கடையில் இருந்த ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருளை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.