ADDED : செப் 01, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் வேட்டைக்காரன் தெரு நிலா நகரில் வசிக்கும் ஐயப்பன் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி. இருவரும் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை சிறுவர்களுக்கு விற்பனை செய்வதாக நகர உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஐயப்பனை கைது செய்து அவரது வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.