ADDED : செப் 14, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குட்கா பொருட்கள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் போலீசார், கடந்த 8ம் தேதி ரோந்து சென்றனர்.
மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டைக்கு செல்லும் வழியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் திலாசுப்பேட்டையை சேர்ந்த பிரபு, 38; என்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்து, அவரிடம் இருந்த குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.