/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.2 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது
/
ரூ.2 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது
ரூ.2 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது
ரூ.2 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது
ADDED : பிப் 11, 2024 02:14 AM

பாகூர்; கிருமாம்பாக்கம் அருகே மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன் மற்றும் போலீசார் நேற்று காலை மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினர்.
அதில், நான்கு சாக்கு மூட்டைகள் மற்றும் அட்டை பெட்டிகளில் ஏராளமான புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடை உரிமையாளர் அருண், 39, என்பவரை கைது செய்த போலீசார், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.