/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.55,000 குட்கா பறிமுதல்: 3 பேர் கைது
/
ரூ.55,000 குட்கா பறிமுதல்: 3 பேர் கைது
ADDED : ஆக 07, 2025 11:09 PM
புதுச்சேரி: சாரம், வில்லியனுார் பகுதியில் ரூ.55 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரி, சாரம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக டி.நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.
சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கு உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மணிகண்டன், 48; என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள், 15 ஆயிரத்து 150 ரூபாய் ரொக்கம், 2 மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மணிகண்டன் அளித்த தகவலின் பேரில், வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து கொடுத்த மரக்காணத்தை சேர்ந்த அன்புதமிழ், 31; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், வில்லியனுார் உறுவையாறு பகுதி பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை வில்லியனுார் போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் ரவிச்சந்திரன், 47; மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.