ADDED : அக் 12, 2025 04:32 AM
புதுச்சேரி : கோரிமேடு, மேட்டுப்பாளையம் பகுதியில், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி போலீசார் மற்றும் சுகாதாரத் துறை இணைந்து, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க சிறப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ், மாநில புகையிலைக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கோரிமேடு, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சில கடைகளுக்கு அபராதம், சிலருக்கு எச்சரிக்கை மற்றும் வழக்குப் பதிவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இது போன்ற சட்ட மீறல்கள் மீண்டும் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். ஆலோசகர் சூரியகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.