/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கம்பன் அரசு பள்ளியில் உடற்பயிற்சி கூடம் திறப்பு
/
கம்பன் அரசு பள்ளியில் உடற்பயிற்சி கூடம் திறப்பு
ADDED : ஜூலை 31, 2025 03:10 AM

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடந்தது.
மத்திய அரசு நாடு முழுதும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து அப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியில், நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், சி.சி.டி.வி., கேமிரா பொறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். உடற்கல்வி விரிவுரையாளர் குருநாதன் வரவேற்றார். தலைமையாசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளர் துணை சபாநாயகர் ராஜவேலு உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். ஏற்பாடுகளை நுாலகர் கலியமூர்த்தி, ஆசிரிரியர்கள் சக்திவேல், எழில்வேந்தன், புஷ்பராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.