/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி.ஏ.ஓ., போட்டி தேர்விற்கு இன்று முதல் ஹால் டிக்கெட்
/
வி.ஏ.ஓ., போட்டி தேர்விற்கு இன்று முதல் ஹால் டிக்கெட்
வி.ஏ.ஓ., போட்டி தேர்விற்கு இன்று முதல் ஹால் டிக்கெட்
வி.ஏ.ஓ., போட்டி தேர்விற்கு இன்று முதல் ஹால் டிக்கெட்
ADDED : செப் 11, 2025 03:11 AM
புதுச்சேரி: வி.ஏ.ஓ., போட்டி தேர்வுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, புதுச்சேரி தலைமை செயலக தேர்வு அமைப்பு உறுப்பினர் செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 41 கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான போட்டி தேர்வு, வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகே, மற்றும் ஏனாம் பகுதிகளில் மொத்தம் 86 தேர்வு மையங்களில் நடக்கிறது.
இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டினை, தேர்வர்கள் htttp://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் இன்று 11ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
உதவி தேவைப்பட்டால், தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.