/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்தவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
/
இறந்தவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
ADDED : மார் 27, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின், உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
காரைக்காலில் கடந்த 25ம் தேதி புதிய பஸ் நிலையத்தில் ஒருவர் இருக்கையில் உட்கார்ந்தபடி இறந்த நிலையில் இருந்தார். அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
பின், சமூக வலைத்தளம் மூலம் இறந்தவர் திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளத்தைச் சேர்ந்த சேக் தாவுது, 48, என, தெரிய வந்தது. அதையடுத்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின், உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.