
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெரிய காலாப்பட்டு அபய ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.
பெரிய காலாப்பட்டு மாத்துார் சாலையில் அபய ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 12ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு பஜனைக்குழுவுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.