ADDED : டிச 31, 2024 05:56 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் ராமபத்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று காலை 10.15 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு 108 பால்குட அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து வெள்ளிக் கவசம் சாற்றி, தீப ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு கற்பூர ஜோதி தரிசனம் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
