/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
/
வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED : ஜன 12, 2024 03:44 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் அமைந்துள்ள வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு, இக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 504 லிட்டர் பால், 27 வகையான பழங்கள், 108 இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் மகா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில், வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் திருவீதியுலா நடந்தது.
விழாவில் ஆலயத்தின் கவுரவத் தலைவர் சம்பத் எம்.எல்.ஏ., மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.