/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.70 லட்சம் ஹவாலா பணம் புதுச்சேரியில் பறிமுதல்
/
ரூ.70 லட்சம் ஹவாலா பணம் புதுச்சேரியில் பறிமுதல்
ADDED : பிப் 04, 2024 02:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தி செல்வதாக கிடைத்த தகவலின்படி, உருளையன்பேட்டை போலீசார் நேற்று காலை பஸ் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை பஸ்சில் அமர்ந்திருந்த சந்தேக நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், ராஜஸ்தானை சேர்ந்த பீம்சிங், 40, என்பதும், புதுச்சேரி, இளங்கோ நகரில் தங்கி, அண்ணா சாலையில் மாதாஜி என்ற பெயரில் மொபைல் போன் கடை நடத்தி வருவதும், பையில் மொபைல் போன்கள் எடுத்து செல்வதாகவும் கூறினார்.
அவரது பையை போலீசார் பரிசோதித்த போது, 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தது. பீம்சிங்கை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் அளித்த, 70 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை சென்னையில் ஒப்படைக்க எடுத்து செல்வது தெரிய வந்தது.
போலீசார் தகவலின்படி, சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து, பணத்தை பறிமுதல் செய்தனர். பீம்சிங்கை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.