தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மரில் உடல் நலம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

 ஜிப்மரில் உடல் நலம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

 ஜிப்மரில் உடல் நலம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்


ADDED : ஏப் 13, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 07:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனை சார்பில், சுத்தம் மற்றும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

சுகாதார இருவார விழா முன்னிட்டு, ராமநாதபுரத்தில் உள்ள ஜிப்மர் ஆரம்ப சுகாதார நிலையம், இந்திய பொது சுகாதார சங்கம் புதுச்சேரி கிளை இணைந்து, சுத்தமான இந்தியா ஆரோக்கியமான இந்தியா என்பதை வலியுறுத்தி, சைக்கிள் ஊர்டலம் நடத்தியது. பேரணியை, ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரேமராஜன், டாக்டர் சுபிதா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

ஊர்வலம் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 75 பேர் பங்கேற்றனர். ஜிப்மர் வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி ராமநாதபுரம் ஜிப்மர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முடிவடைந்தது. அங்கு, அவர்கள், ''சுத்தம் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் வடிவேல், டாக்டர் சுபிதா, பொதுமக்கள் சுத்தம் மற்றும் உடல் நல முன்னெடுப்புகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினர். பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us