/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு நடுநிலைப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு
/
அரசு நடுநிலைப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு
ADDED : பிப் 06, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; முத்திரையர்பாளையம் அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலை பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் பாஸ்கரராசு துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம் சுகாதார மைய மருத்துவர் தமிழரசி பங்கேற்று, இளம் வயதில், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விளக்கம் அளித்தார். மருத்துவர் சவுமியன் சுகாதாரம் பற்றி எடுத்துரைத்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஓவிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள் ஏஞ்சலின், சுமதிராகவன், சாவித்திரி, சதீஷ், செவிலியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் சரோஜா நன்றி கூறினார்.