ADDED : ஏப் 09, 2026 10:40 PM

புதுச்சேரி: உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வில் உள்ள காமராஜ் நகர் தொகுதி காங்., வேட்பாளர் தேவதாசை, அகில இந்திய காங்., பொறுப்பாளர் தினேஷ்குண்டு ராவ் பார்த்து, நலம் விசாரித்தார்.
காமராஜ் நகர் தொகுதி காங்., வேட்பாளர் தேவதாஸ் பிரசாரத்தின் போது உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று, ஓய்வில் இருந்து வருகிறது.
இதையொட்டி, வீட்டில் ஓய்வில் இருந்து வரும் தேவதாசை அகில இந்திய காங்., கமிட்டி பொறுப்பாளரும், கர்நாடகா அமைச்சருமான தினேஷ் குண்டு ராவ், அகில இந்திய காங்., பொதுச்செயலாளர் கிரிஷ் சோடங்கர், செயலாளர் அஞ்சலி நிமால்கர் ஆகியோர் நேரில் சந்திந்து, உடல்நிலையை விசாரித்தனர்.
அப்போது தினேஷ் குண்டு ராவ், உடல்நலனை முதன்மையாகக் கவனித்துக் கொள்ளுங்கள், காமராஜ் நகர் தொகுதியில் காங்., கட்சிக்கு வெற்றி வாய்ப்பு மிகுந்து காணப்படுகிறது. எந்த கவலையும் கொள்ளாமல் நிம்மதியாக ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என, உற்சாக படுத்தினர்.
