/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொற்றுநோய் பரவலை தடுக்க சுகாதாரத்துறை அட்வைஸ்
/
தொற்றுநோய் பரவலை தடுக்க சுகாதாரத்துறை அட்வைஸ்
ADDED : அக் 11, 2024 05:54 AM
புதுச்சேரி: பருவமழையின் போது பரவக்கூடிய நோய்களை தடுக்கும் முன் எச்சரிகை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
சுகாதாரத்துறை இயக்குனர் (பொறுப்பு) செவ்வேள் செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் பருவமழை துவங்கயுள்ளதால், டெங்கு உள்ளிட்ட கொசு மூலம் பரவக்கூடிய நோய்களை தடுக்க, வாரந்தோறும் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, அப்புறப்படுத்த கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் சுகாதாரமான குடிநீரை மட்டுமே அருந்த வேண்டும். வயிற்றுப்போக்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அடிக்கடி ஓ.ஆர்.எஸ் கரைசல் கொடுக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியில் சென்று வரும் போதும், உணவு அருந்துவதற்கு முன்பும், கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களுக்கான சிகிச்சை மற்றும் தேவையான அனைத்து மருந்துகள், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.
டெங்கு காய்ச்சலை தடுக்க, பகல் நேரத்தில் கொசு கடிக்காத வகையில் அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
அதற்காக, ஜன்னல்களில் வலைகள், கொசு விரட்டி, மூலிகை கொசு விரட்டிகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
வாரம் ஒரு முறை வீடுகளை சுத்தப்படுத்தி உலர்தினம் கடைப் பிடிப்பதன் மூலம் டெங்கு பரவலை தடுக்க இயலும். ஆகவே, மக்கள் விழிப்புணர்வுடன் வடகிழக்கு பருவமழையின் போது பரவக்கூடிய நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

