தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முற்றுகை

 சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முற்றுகை

 சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முற்றுகை


ADDED : பிப் 17, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஆஷா பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்ககோரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி ஆஷா பணியாளர்களுக்கு கடந்த பட்ஜெட்டில் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், பட்ஜெட்டில் அறிவித்த ஊதிய உயர்வை அமல்படுத்த கோரியும், நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை உடனடியாக வழங்ககோரியும் ஆஷா பணியாளர்கள் சங்கத்தினர், சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு, சங்க தலைவர் ஆனந்தநாயகி தலைமை தாங்கினார். செயலாளர் வேல்மதி, துணை தலைவர்கள் சுதா, வைஜெயந்திமாலா உள்ளிட்ட ஆஷா பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்பு போராட்டத்தை ஆதரித்த பேசிய எதிர்க்கட்சி தலைவர் சிவா, ஆஷா பணியாளர் நிர்வாக இயக்குநரை சந்தித்து உயர்த்தி அறிவித்த ஊதிய கோப்பை தாமதமின்றி அரசுக்கு அனுப்பி அனுமதி பெற வலியுறுத்தினார்.

அப்போது, சம்பத் எம்.எல்.ஏ., அரசு ஊழியர்கள் சம்மேளன பிரேமதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us