/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதாரத்துறை இயக்குனரகம் முற்றுகை
/
சுகாதாரத்துறை இயக்குனரகம் முற்றுகை
ADDED : ஜன 14, 2026 06:36 AM

புதுச்சேரி: பணி நியமனம் வேண்டி, கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள், சுகாதாரத்துறை இயக்குனரகத்தை நேற்று முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அரசு, கடந்த 2020ம் ஆண்டு நேர்முகத் தேர்வின் மூலம் ஒப்பந்த அடிப்படையில், 256 செவிலியர்களை நியமித்தது.
இதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு 90 நாட்களாக, அரசு இவர்களது ஒப்பந்தத்தை புதுப்பித்து வந்தது. கடந்த 2023ம் ஆண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் செவிலியர்களை பணிநீக்கம் செய்தது.
இதனையடுத்து செவிலியர்கள் பணிநியமனம் வேண்டி, பல கட்டங்களா போராட்டங்களை நடத்தி வந்தனர்.
தற்போது சுகாதாரத் துறையில் செவிலியர்கள் காலி பணியிடங்களில், பணி நியமனம் வேண்டி சுகாதாரத்துறை இயக்குனரகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு, கொரோனா கால ஒப்பந்த செவிலியர் கூட்டமைப்பு தலைவர் கல்பனா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் சோனியா, துணை செயலார் பிரவீன்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

