/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு செவிலியர் அதிகாரி பணிக்கு மெரிட் லிஸ்ட் தயாரித்தது எப்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்
/
அரசு செவிலியர் அதிகாரி பணிக்கு மெரிட் லிஸ்ட் தயாரித்தது எப்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்
அரசு செவிலியர் அதிகாரி பணிக்கு மெரிட் லிஸ்ட் தயாரித்தது எப்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்
அரசு செவிலியர் அதிகாரி பணிக்கு மெரிட் லிஸ்ட் தயாரித்தது எப்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்
ADDED : மார் 05, 2024 05:01 AM
புதுச்சேரி: செவிலியர் அதிகாரி பணிக்கு மெரிட் லிஸ்ட் தயாரித்தது எப்படி என சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 105 செவிலியர் அதிகாரி பணியிடங்கள் நிரப்ப கடந்த ஆண்டு செப். 29 ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அறிவிப்பு வெளியிட்ட பின்பு பதவி உயர்வு, பணி ஓய்வு, பதவி விலகல் மற்றும் விருப்ப ஓய்வு காரணமாக 50 காலியிடங்கள் உருவானது.
செவிலியர் அதிகாரி பணி நியமனத்திற்கான அறிவிப்பின்போது, தேவையை பொறுத்து அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, குறைக்க அரசுக்கு உரிமை உள்ளது என தெரிவிக்கப் பட்டது.
அதன்படி, கூடுதலாக 50 இடங்கள் சேர்த்து நிரப்ப அரசு முடிவு செய்தது. அதன்படி, 155 பணியிடத்திற்கான தேர்வு நடந்தது. மெரிட் அடிப்படையில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.
இதில், முதற்கட்டமாக முழுமையாக சான்றிதழ் சமர்ப்பித்த 92 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
செவிலியர் பணிக்கான மெரிட் மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கீடு செய்யப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்;
பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் 50 சதவீதம், பி.எஸ்.சி. அல்லது டிப்ளமோ நர்சிங் படிப்பில் பெற்ற மதிப்பெண் 50 சதவீதம், வேலைவாய்ப்பகத்தில் நர்சிங் படிப்பு பதிவு செய்திற்கான சீனியாரிட்டிக்கு 15 சதவீதம் மதிப்பெண் சேர்த்து 115 மதிப்பெண் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு சீனியாரிட்டி என்பது, நர்சிங் படிப்பு பதிவு செய்து ஒராண்டு முழுமை பெற்றால் 1.5 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும். 2 ஆண்டு முடிந்தால் 3 சதவீதம் என ஒவ்வொரு ஆண்டிற்கும் 1.5 சதவீதம் மதிப்பெண்ணும், அதிக பட்சமாக 10 ஆண்டிற்கு 15 சதவீத மதிப்பெண் வழங்கப்படும் என கூறினர்.

