/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதார ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
சுகாதார ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 22, 2024 07:06 AM

புதுச்சேரி : புதுச்சேரி சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அண்ணா சிலை அருகே நடந்த ஆர்பாட்டத்திற்கு சுகாதார சம்மேளன தலைவர் கீதா தலைமை தாங்கினார்.
துணை தலைவர்கள் விநாயகம், வெற்றிவேல், ஜெகதீசன், அமைப்பு செயலாளர்கள் மணிவாணன், ஜெகநாதன், செயலாளர்கள் சதீஷ், கலைவாணி, பிரகதீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் முனுசாமி, செயலாளர் ஜவஹர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், 7 வது ஊதியக்குழு பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட நோயாளி கவனிப்பு படி, நர்சிங் அலவன்ஸ் ஆகியவற்றின் நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். சுகாதாரத்துறை காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
என்.ஹச்.எம். ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆஷா ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சம்மேளன நிர்வாகிகள்,சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சுகாதார சம்மேளன பொருளாளர் கிரி நன்றி கூறினார்.