/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெப்ப அலை, இடி மின்னல், கடல் அரிப்பு மாநில பேரிடர்களாக அறிவிப்பு
/
வெப்ப அலை, இடி மின்னல், கடல் அரிப்பு மாநில பேரிடர்களாக அறிவிப்பு
வெப்ப அலை, இடி மின்னல், கடல் அரிப்பு மாநில பேரிடர்களாக அறிவிப்பு
வெப்ப அலை, இடி மின்னல், கடல் அரிப்பு மாநில பேரிடர்களாக அறிவிப்பு
ADDED : ஏப் 05, 2025 04:11 AM
புதுச்சேரி: வெப்ப அலை வீசுதல், கடல் அரிப்பு, இடி மின்னல் ஆகியவை புதுச்சேரி மாநிலத்தின் பேரிடர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சமீப காலமாக மாறி வரும் சுற்றுச்சூழல், வானிலை, பருவநிலை காரணமாக கோடைக்காலம் மிக நீளமாக மாறி வருவதுடன் வெப்பமும் அதிகரித்து வெப்ப அலை வீசி வருகிறது. கடலோரங்களை பொறுத்தவரை கடல் நீரானது கரையினை அரித்து நிலத்தை நோக்கி முன்னேறி வருகிறது. மேலும் மழைக்காலங்களில் குறைவான நாட்கள் மட்டுமே மழை பெய்தாலும், ஓரிரு நாட்களில் பெரும் இடி மின்னல் காற்றுடன் பெய்து பேரிடராக மாறிவிடுகிறது.
இதன் காரணமாக ஊர்களின் உள்கட்டமைப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. விலை மதிக்கமுடியாத மனித உயிர்களையும் இழக்க நேரிடுகிறது. இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையானது, இந்த வெப்ப அலை வீசுதல், கடல் அரிப்பு, இடி மின்னல் ஆகியவை புதுச்சேரி மாநிலத்தின் பேரிடர்களாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த மூன்று பேரிடர்களால் பாதிக்கப்பட்டு இறப்பு அல்லது காயம் அடையும் சம்பவங்களில் மாநில பேரிடர் மீட்பு நிதி விதிமுறைகளின்படி புதுச்சேரி யூனியன் பிரதேச பேரிடர் மீட்பு நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

