ADDED : மார் 14, 2026 05:44 AM

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி மற்றும் சமுதாயக் கல்லுாரி ஆகியன இணைந்து லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் துாய்மை பணியினை மேற்கொண்டனர்.
புதுச்சேரி ஸ்வச் சர்வேக் ஷன் மூலம், உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் சுத்தம் செய்வதற்கு, சுத்தம் செய்யும் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, லாஸ்பேட்டை சமுதாயக் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் இணைந்து ெஹலிபேடு மைதானத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தை சுற்றி குவிந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். நிகழ்ச்சியில், கணினி அறிவியல் துறை தலைவர் லதா பார்த்திபன், தேசிய சேவைத் திட்ட அதிகாரி சுரேஷ் குமார், உடற்கல்வித் துறைத் தலைவர் ஜெகதேஸ்வரி, அலுவலக உதவியாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

