ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் ஹெலிபேடு மைதானம்:எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகளுக்கு சபாஷ்
ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் ஹெலிபேடு மைதானம்:எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகளுக்கு சபாஷ்
ADDED : மார் 18, 2026 04:49 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் முழுவதும் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு,ஔி வௌ்ளத்தில் ஜொலிப்பதால் வாக்கிங் செல்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் காலையிலும், மாலையிலும் ஆயிரக்கணக்கானவர்கள் வாக்கிங் செல்லுகின்றனர். நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களும் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு வருகின்றனர்.
ெஹலிபேடு மைதானம், கடந்த காலங்களில் வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கி கிடந்தது. சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால், மாலை 6:௦௦ மணிக்கு மேல் வாக்கிங் செல்ல முடியாது. குடிமகன்களின் கூடாரமாக மாறி, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது.
இப்போது, ெஹலிபேடு மைதானம் வாக்கிங் செல்வதற்கு ஏற்ற இடமாகவும், பாதுகாப்பான சூழலில் பொதுமக்கள் குடும்பத்துடன் பொழுதை கழிக்கும் இடமாகவும் தலைகீழாக மாறியுள்ளது.
இதற்கு, ரூ.1.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளும், ரூ. 75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்குகளும், தெரு மின் விளக்குகளும் தான் காரணம். மைதானத்தை சுற்றிலும் தற்போது சாலைகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மைதானம் முழுவதும் ஐந்தே ஹைமாஸ் விளக்குகளும், விரல் விட்டு எண்ணக் கூடிய தெரு விளக்குகளும் இருந்த நிலையில், தற்போது மைதானத்தில் எங்கு பார்த்தாலும் ஹைமாஸ் விளக்குகள் ஒளி வெள்ளத்தை பாய்ச்சி கொண்டுள்ளன.
குறிப்பாக, மைதானத்தை சுற்றியுள்ள தெருக்களில் வரிசையாக 180க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் புதிதாக பொருத்தப்பட்டு இருளை விரட்டி கொண்டுள்ளன. அதாவது, உழவர் சந்தை நேத்தாஜி சிலையில் ஆரம்பித்து கல்லுாரி சாலை வழியாக மைதானத்தை சுற்றியுள்ள தெருக்களில் மின் விளக்குகள் புதிதாக ஜொலிக்கின்றன.
நாவற்குளம் சாலையிலும் புதிதாக தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டு பளீச்சென காட்சியளிக்கிறது. இதனால், லாஸ்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் அச்சமின்றி ஹெலிபேடு மைதானத்துக்கு வருவதுடன், நிம்மதியாக வாக்கிங் செல்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக லாஸ்பேட்டை பகுதி மக்களுக்கு புதிய பொழுதுபோக்கு மையமாகவும், வாக்கிங் செல்வதற்கு பாதுகாப்பான இடமாகவும் ஹெலிபேடு மைதானம் உருவெடுத்துள்ளது.
இதற்காக உழைத்த காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், கல்வி, பொதுப்பணி, மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி.
தொடர்ச்சியாக ரோந்து பணி மேற்கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பாக வலம் வருகின்ற லாஸ்பேட்டை போலீசார் அனைவருக்கும் நன்றி.
ஹெலிபேடு மைதானத்தில் தொடர்ச்சியாக துப்புரவு பணி மேற்கொண்டு வருகின்ற நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்தும் பேராசிரியர்களுக்கும் நன்றி.
குறிப்பாக, ஹெலிபேடு மைதானம் புதுப்பொலிவு பெறுவதற்கு மிகுந்த கவனம் செலுத்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, பணிகளை ஒருங்கிணைத்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,வுக்கு மீண்டும் நன்றி.
