ADDED : டிச 20, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, தவளக்குப்பத்தில் பொதுமக்களிடையே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வரும் 1ம் தேதி முதல் கட்டாயம் ெஹல்மெட் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவின்குமார் திரிபாதி தலைமையில், தவளக்குப்பம் சந்திப்பில், ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.