ADDED : மார் 24, 2026 10:48 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி போலீசார் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும் என, சீனியர் எஸ்.பி., திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா வெளியிட்டுள்ள சுற்றறிக்கை; புதுச்சேரி போலீசார் அனைவரும், இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். உயர் அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் வேலை பார்க்கும் போலீசார் ஹெல்மெட் போடுவதை உறுதி செய்ய வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் போலீசாருக்கு ரூ. 1,000 அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
உத்தரவுகளை மீறும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மதிக்காத பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
