ADDED : ஆக 26, 2026 06:02 PM
புதுச்சேரி: ஆசிரியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருசக்கர வானங்களை ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். நடைமுறையில் உள்ள சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். ஹெல்மெட் அணியாத ஆசிரியர்கள் பெயர் பட்டியலை மாதந்தோறும் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
மேலும், 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனங்களை எடுத்துவர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
