ADDED : டிச 15, 2024 05:58 AM
இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், ஜனவரி மாதம் முதல், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தில், செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, கடந்த 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதற்கு, பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதால், திட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து, கவர்னராக இருந்த கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் அணியும் திட்டத்தை அமல்படுத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அடுத்து, கட்டயமாக்கப்பட்டது.
இந்நிலையில், போலீசார், அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் சிலர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து செல்கின் றனர்.
இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் முதல், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்வது தொடர்பாக, போக்குவரத்து போலீசார், உயரதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி, திட்டமிட்டு வருகின்றனர்.